Thursday 14 November 2013

இரசமணி புறம் -- 4


    இரசமணி புறம் -- 4                       





















  
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத்துணிவு 

தாழ்ச்சியுள் தங்குதல் தீது -- குறள் 



உள்ளடக்கம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்னுரை (2) இரசம் (3) ஐம்புதங்களும் இரசவாதமும் (4) இரசமணி (5) சித்தர் நூல்களில் இரசமணி (6) அஷ்டமா சித்திக் குளிகைகள் (7) இரசமணி செய் முறைகள் (8) முடிவுரை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
முன்னுரை :-
இராசமணி என்பதை பார்ப்போம் இதில் சித்தர்கள் இரண்டுவிதத்தில் கூறுகின்றனர். அகம், புறம்  என்று இருவேறு முறைகளில் கூறுகின்றனர். ஒன்று வெளியில் உள்ள பொருள்களான பாதரசம் என்று வழங்கப்படும் மூலகத்தில் இருந்து செய்யப்படும் முறை மற்றொன்று நம் உடலின் உட்புறமாக செய்யப்படும் ஒருவித செயல்பாட்டின் செயல் குறித்தான விதத்திற்கு இரசமனி என்று பெயர் சூட்டி அதன் வழிமுறைகள் பற்றி கூறுகிறர்கள் நாம் இரண்டுவிதத்திலும் பார்ப்போம் புறத்தில் பாதரசத்தை வைத்து செய்யப்படும் முறை பற்றி பார்ப்போம். சித்தர்களின் பலபாடல்கள் பரிபாசையாக பாடப்பட்டுள்ளது. ஒன்றைக் கூறிக்கொண்டு இருக்கும்போது வேறு ஒரு செய்தி பற்றி தாவிச் சென்று விடுகின்றனர். இதை இனங்கண்டு பிரிப்பது என்பது மிகச் சிரமம். என் அறிவிற்கு எட்டியமட்டில் இதனை விவரித்து உள்ளேன்.   





இரசம் :-
இரசம் இது பாதரசம் என்று அழைக்கப்படும் திரவ உலோகம். இது குளிர் காலம் உஷ்னகாலம் இரண்டிலும் திரவமாக இருக்கும் உலோகம். இதன் அணு எண் 80-, 0’ டிகிரிக்கு கிழே 39’ டிகிரி உஷ்னநிலையை அடையும்போது உறையக் கூடியது. கிரேக்கர்களும், ரோமர்களும் பாதரசத்தை ஹைடிரார்ஜிரம் (Hydrorgyrum) என அழைத்தனர், பாதரசத்திற்கு மெர்க்குரி என்றும் பெயர் உள்ளது, இது இடைக்கால விஞ்ஞானிகள் இட்ட பெயர், பாதரசம் கனம் மிகுந்த பொருள். இரும்பை விட இரண்டு மடங்கும், காரியத்தை விட மூன்று மடங்கும் கனமுடையது. இதில் காரியச் சத்து நிறைந்து இருக்கிறது. இது உஷ்ணமானியில் பயன் படுகிறது. 357’ டிகிரியில் கொதித்து ஆவியாகிறது.
      விஞ்ஞானம் திடப்பொருளைப் பற்றிக் கூறும் போது எடையுள்ள எல்லாப் பொருளையும், மனிதன், மரம, பாறை, இரும்பு என்று எல்லாவற்றையும் திடப் பொருள் எனக் கூறுகிறது. சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களும் திடப் பொருளே, காற்றுக் எடை உண்டு என்பதால் அதுவு திடப் பொருளாக கூறுகிறது. ஆனால் ஒளி, வெப்பம், வானொலி, எக்ஸ்கதிர்கள் ஆகியவை எடையற்றவை இதனால் இவற்றை திட பொருளாக கருதுவது இல்லை.
       எல்லாப் பொருள்களும் மிகச்சிறிய நுண் துகள்களால் ஆனவை. மிக, மிக நுண்ணியவை, இவைகளை அனுக்கள் (Atoms) என்று அழைக்கப்படுகிறது. நாம் பலவகையான பொருள்களை பார்க்கிறோம். இப்பொருள்களை அணுக்களே பல ஒன்று சேர்ந்து உருவாக்குகின்றன. இதுவரை அறியப்பட்டது அல்லது முடிவு செய்யப்பட்டது 102 அனுக்கள் என்றும் இந்த மூலகங்கள் தாம் நாம் அறிந்தவை இதில் சில அனுக்கள் தனித்தன்மை கொண்டவை. பிறவற்றுடன் சேராததாக இருப்பது உண்டு. இந்த அணுக்கள் கூட்டங்களாக இணைந்து இருக்கும் போது இவற்றை மூலக்கூறுகள் (molecules) என்று அழைக்கப்படுகிறது.
      மாறுபட்ட அனுக்கள் இணைந்து பலவகைப் பட்ட பொருள்கள் உண்டாகின்றன. ஒரு பொருளின் மூலக்கூறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட அனுவகைகள் இணைந்து ஆக்கப்படுகிறது. இதனை கூட்டுப்பொருள்(compound) என அழைக்கப்படுகிறது. நாம் காணும் அனைத்து பொருள்களும் இவ்விதம் அனுக்கள் இணைந்த கூட்டுப்பொருள் தான். இந்த 102 – அனு மூலகங்கள் தான் உலகம் அண்டத்தின்னை ஆக்கும் அடிப்படையாகும். மனிதன், மரம், உலோகங்கள் அனு மூலகங்களின் இனைப்புத்தான்.
       எல்லா மூலகங்களும், குணத்திலும் தோற்றத்திலும், மாறுபடுகின்றன சில வாய்வாகவும், சில திரவமாகவும், சிலதிடப் பொருளாகவும் இருக்கின்றன. சில நிறம் முள்ளவை சில நிறம் அற்றவை, சில ஒளி விடுபவை என்று உள்ளது. ஒவ்வொரு அணுவும அதனினும் சிறிய துகள்களால் ஆனது. அணுவின் வெளிப்பகுதி (electrons ) மின் துகள்களைக் கொண்டுள்ளது. இச்சிறிய மின்துகள் ஒன்று, இரண்டு, மூன்று என்று 102 , வரிசைகளைக் கொண்டுள்ளது. விஞ்ஞானம் இவ்வித அணு மூலகத்திற்கு ஒரு பெயர் கொடுத்து அதற்கு வரிசையாக அணு எண்கள் கொடுத்துள்ளது. ஒரு அணு 20 மின் துகள்களைக் கொண்டு இருக்குமானால் அதன் அணு எண் 20 ஆகும். இது போல் அட்டவணையின்படி பாதரசம் 80 –மின் துகள்கள்களைக் கொண்டதால் பாதரசத்தின் அணு எண் 80 ஆகும்.
     நம்மைச்சுற்றி உள்ள கண்ணில் காணப்படும் பொருள்கள் யாவும் ஒரு திட்டமான வடிவம், குணம் உடையவை. ஒரு பொருள் கருங்கல்லைப் போல் கடினமாக இருக்கலாம், மெழுகைப் போல் மிருதுத்தன்மையாக இருக்கலாம், இரும்பைப் போல் உறுதியாக இருக்கலாம்,ரப்பரைப் போல் மீள் தன்மை உடையதாக இருக்கலாம் அலுமினியம், பிளாஸ்டிக்கு போல் எளிதில் உடையக் கூடியதாக இருக்கலாம். இது அப் பொருளின் குணம். இப்பொருள்களின் மூலக் கூறுகள் ஒன்றுடன் ஒன்று உறுதியுடன் இணைந்துள்ளது. இது அவற்றின் தனித்தன்மையாகும். இவற்றை உஷ்ணநிலைக்கு கொண்டு செல்லும்போது, ஒரு குறிப்பிட்ட உஷ்ண நிலையில் அம்மூலக்கூறுகள் பிரிந்து நழுவுகின்றன. இந்நிலையில் திடப் பொருள் உருகுவதாக கூறப்படுகிறது. ஒரு உஷ்ண நிலையில் திரவமாக மாறிவிடுகிறது. சிலபொருள்கள் உஷ்ண நிலை அதிகமாக அதிகமாக உருகுவதற்கு பதில் சிதைவடைகிறது. அந்நிலையில் ஆவியாகிறது அல்லது வெடிக்கிறது. ஆனால் திரவப் பொருள்களின் மூலக் கூறுகள் உறுதியாக பிணைக்கப்பட்டு இருப்பினும் உஷ்ணப்படுத்தும் பொழுது பிரிந்து வாயுப் பொருளாக மாறிவிடுகிறது. இது இன்றைய விஞ்ஞான நிலைப் பாடாகும். ஆனால் கி.மூ நான்காம் நூற்றாண்டில்,அரிஸ்டாட்டில் (Arisotil ) என்ற தத்துவ ஞானி வகுத்த சித்தாந்தம் மிக்க வலிமை பெற்று ஆதிக்கம் உடையதாக இருந்தது, தீ, வாயு, நிலம், நீர், என்பனவே உலகின் அமைப்புக்கு காரணமான மூலப் பொருள்கள் என்ற உலக சிந்தனைகளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்றுவரை இப் பூதக் கொள்கை சிலரிடம் இருந்து வருகிறது. எகிப்து நாடும் அராபிய நாடும் இடைக்காலத்தில் இராசவாதத்தை தோற்றுவித்தது.








ஐம்பூதங்களும், இரசவாதமும் :-   
   தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக்குவது (தங்கமாக) ரசவாதத்தின் நோக்கமாகும். இரசாயன சோதனைகளுக்கு பெரும் வாயிலைத் தோற்றுவித்தது இந்த தங்கமாக்கும் செய்கையே. 1712 –ம் ஆண்டு ஜெர்மானிய இராசயணி ஜார்ஜ் எர்னப்ஸ்ட்டாட்  ( Georg ernst staht ) என்பவர் ப்ளஜிஸ்ட்டன் என்னும் எரிதலுக்கான செயலுக்கு பெயரிட்டு அழைத்தார். அந்த காலம் முதல் இராசயனத்தில் பல மாற்றங்கள் தோன்றின. அரிஸ்டாட்டிலின் பூதக்கொள்கையும் வலுவிழந்தது.
      இந்தியாவிலும், தமிழ் நாட்டில் தொல்காப்பியரும் இப் பூதக்கொள்கை பற்றிக் கூறியுள்ளார். ஆனால் நம்  நாட்டவர்கள் ஆகாயத்தையும் சேர்த்து ஐம்பூதங்களாகக் கூறினார்கள். இவ் அடிபடையிலேயே சித்த மருத்துவத்தில் சித்தர்கள் இக் கொள்கையையே அடிப்படையாகப் பின் பற்றினார்கள் இதைக் கொண்டே அனைத்தையும் விவரிக்கின்றனர். இப்பொழுது தொல்காப்பியரின் பாடலை பார்ப்போம்.
“ நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
  கலந்த மயக்கமுலகம் ஆதலின்
  இருதிணை அய்ம்பால் இயல்நெறிவழா அடைத்
  திரிவுகில் சொல்லொடு தழாஅல் வேண்டும்.
                                 தொல்காப்பியம் மரபியல் -1589
       நிலமும் நெருப்பும் நீரும் காற்றும் விண்ணும் கலந்த தொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டு இருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று என்று தொல்காப்பியர் கூறுகிறார். இது போல் வடநாட்டில் தோன்றிய சமணர்களும் இவ் ஐம்பூதங்கள் கோட்பாட்டினையே கொண்டு இருந்தார்கள். 










இதையே திருமூலர் தன் திருமந்திரத்தின் வாயிலாக கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“ மானின்கண் வான்ஆகி, வாயு வளர்ந்து, அனல்
  கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த்
  தேனின்கண் ஐந்தும் செறிந்து அஞ்சு பூ தமாய்ப்
  பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
                                        :-திருமந்திரம் -196
மான் என்பது பிரகிருதி இவ்பிரகிருதி மாயையிலிருந்து ஆகாயம் தோன்றி அதில் வாயு உண்டாகி நெருப்பும் நீரும் கலந்து கடினமான பிருதிவியாகி ஐம்பூதங்களும் புவனம் தோன்றும். மற்றும் ஐம்பூதங்களின் இயல்பு பற்றி திருமூலர்.
நீரகத்து இன்பம் பிறக்கும், நெருப்பு இடை
காயத்தில் ஜோதிபிறக்கும், அக்காற்று இடை
ஒர்வுஉடை நல்உயிர், பாதம் ஒளசத்தி
நீர்இடைமண்ணின் நிலைபிறப்பு ஆகுமே.
                                  :- திருமந்திரம்
பூதங்களின் இயல்புகளான நீரில் சுவை, நெருப்பில் ஒளி காற்றில் உறு(உணர்வு), ஆகாயத்தில் ஒலி, மண்ணில் திண்மை என்று நம் உடலில் ஐம்பூதங்களும் ஐம்புலன் உணர்வுகளாக தோற்றும். இவிதம் நம் பூமியில் அனைத்து பொருள்களும் ஐம்பூதங்களின் இணைப்பு என்னும் சித்தாந்தத்தை சித்தர்கள் கொண்டு இருந்தனர் இதில் இராசமானது பிருதிவி+அப்பு இரண்டின் கூறுகளும் பிணைந்த பொருளாக இரசவாத சிந்தாமணி கூறுகிறது.
      சித்தர்கள் பாதரசத்தின் மருத்துவ குணத்தை கீழ்கண்டவாறு கூறுகிறார்கள்.
விழிநோய் கிரந்திகுன்ம மெய்ச்சூலை புண்குட்
டழிகாலில் விந்து வினாலத்தை – வழியாய்
புரியும்விதி யாதும் புரியினோ எல்லா
மிரியம் விதி யாது மிலை.  
                                 :-  குணபாடம் தாதுவர்க்கம்
   இரசத்தை முறைப்படி மருந்தாக்கிக் கொடுக்க நேத்திர நோய், கிரந்தி, கீல் பிடிப்பு, மகாவிரணம்,பெருவியதி, கீல் பிடிப்பு, மகா விரணம், பெருவியாதி, சீனவாதம், முதலிய பிணிகள் நீங்கும். இத்தகைய இராசத்திற்கு சில கெட்ட குணங்களும் உண்டு. அவை சர்ப்பம், வங்கம் வன்னி, கந்தி, சாஞ்சலம், மலம, காளம், மந்தம் என்ற குற்றங்கள் கூறப்படுகிறது. இக்குற்றங்களை நீக்காமல் மருந்து செய்யின் உண்பவர்களுக்கு மேற்கூறிய நோய் குணங்களை உண்டாக்கும். மூளையின் தன்மையையும் கெடுத்துவிடும்.
கலையைக் கிழிக்கும் மவிழ்த் தெறியுங்
கல்லைத் தேடி எடுத்து எறியும்
மலையிற் குதிக்கும் புனன் முழ்கும்
அருள் சேர் பித்தந்தனைகொடுக்கும்
முலையிள்ளல் போலுடல் வெதுப்பு 
ஓயாய அழலை வியர்வாக்கும்
பல காலமும் வாய் பிதற்றும்
பாதரச தோசம் மிதே.
                          :- பதார்த்த குணம் தாது வர்க்கம்
இராசத்தினை சுத்தம் செய்யாமல் தந்தால்  மேற்க்கண்ட பைத்தியத்தின் செய்கைகள் உண்டாக்கும். இந்த இராசத்தினை விந்து என்றும் சிவாம்சம் என்றும் பெரியோர்கள் பொருள் உரைக்கின்றனர். தேரையர் தனது வெண்பாவில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
சர்ப்பவங்கம் கந்திவன்னி சாஞ்சலம் மலம காளம்
ஒப்பும மந்தம் எட்டோடே மோட்டிரதத்தை புசியார்
கொப்புளம் குட்டாங்கிஎரிக கோதுபிந்தி னைப்பிறந்த
லப்புள மூர்ச்சைகுரியார் –
                            :- தேரையர் வெண்பா
சர்ப்பம் – பாம்பை போல் ஓடுதல், வங்கம் – சராசர என்னும் ச்ப்த்தம், வன்னி – உஷ்ணத்தன்மை, சாஞ்சலம் –எறியும் தன்மை, கந்தி – ஒளியுடன் இருத்தல் மலம – அழுக்கு, காளம் – விடத்தன்மை, மந்தம் – இயல்புத்த்தன்மையை குறைத்தல் போன்ற குணங்களால் இதை நீக்காமல் உண்டால் கொப்புளம், குஷ்டம், உஷ்ணம், எரிச்சல், நிறம்மாற்றம், விந்து நஷ்டம், மூர்ச்சை, மரணம் என்பன உண்டாக்கும். இதே போல் அகத்தியரும் கூறுகிறார். ஆனால் எழுவகையாக கூறுகிறார்.நாகம்,வங்கம், கந்தி, வன்னி, சாஞ்சலம், விடம், லோகம், என்று. 








இதுபோல் போகரும் எழுவித தோஷங்கள் உள்ளதாக் கீழ்க்கண்ட பாடலில் கூறுகிறார்.
எடுப்போர்க்குச் சூதமென்ற ரசத்தைக் கேளாய்
எழிலான பொற்கொன்றை நிறமாய்க் காணும்
தொடுப்போர்க்கு எழுவித தோஷம் நீக்கி
சுத்தி செய்து பதினெட்டு பின்புதானும்
                               :- போகர்
இது பற்றி தேரையர் இந்த சுத்தி செய்யாத் இரசத்தை உண்பதால் வரும் உடல் கேடுகள் பற்றி,
மேகம் பிறக்கும் அறிவழிக்கும் மேனிஎங்கும் வெளுத்துவரும்
ஆகம் தளர்ந்து வயிரிழியும் அரக்குபோல் உதிரம்விழும்
தாகம் எடுக்கும் உப்பிசமாம் சரிரமெங்கும் வேர்த்துவிடும்
பாகம் இழக்கும் வாய்குழரும் பாதரசக் குணம் இதுவே
                                             :- தேரையர்
வாலைரசம் கோபித்தல் மருளதாகவே தான் பிதற்றும்
காலை கைகள் நோவெடுத்து காதுசெவிடா அடைப்பாகும்
பாலை அனைய வாய்குழறி பாண்டு உருவமாய் மெய்வெளுக்கும்
வேலை அனைய கண்ணீரும் விகார வெறிகளாய் விடுமே
                                              :- தேரையர்
தேக்கிய ரததொடம் சிரங்கு புண் சூலைகாட்டும் 
தாக்கிய ஈரல் வற்றித் தாகமும் சுரமும் உண்டாம்
வாக்குள கரமும்காலும் மன்டியே எறியும் பற்றி
ஏக்கமும் விசராந் தானும் சேயும் இவ்வண்ணம் காணே
                                              :- தேரையர்
படுக்கையும் திமிரும் சோம்பும் பாதபங்கயம் இழக்கும்
அடுக்கிய பழுவைப் பற்றி அனல் எழுப்பும் பித்தம் சேரும்
திருக்கெனத் தலைநோய் உண்டாம் தீஎனச் சுரம் உண்டாம்
நாடுகளும் விக்களும் உண்டாம் ரசம் குணம் நாடித்தானே
                                                :- தேரையர்
சத்தியே நோக்கும் பித்தம் சங்கிர கிராணி யாக்கும்
நித்தமும் அலைச்சல் உண்டாம் நெருப்பெழச் சுரமும் எய்தும்
சத்தமும் அடைத்துச் சோதி தன்னையும் மறைத்துப்போடும்
சுத்திய ரசத்தின் தோஷம் தொலைவிலா வியாதியாமே 
                                                :- தேரையர்
பொதுவாக மருந்துகளில் பாடனங்க்களை சேர்க்கும் போது சுத்தி செயதும் உள்ளுக்கு கொடுக்கும் போதும் மிக கவணமாக கொடுக்கவேண்டும். இவ்விதமாக சித்தர்கள் இரசத்தை உபயோகத்திற்கு பயன்படுத்த கூறியுள்ளார்கள். இரசமானது எகிப்து, அரபு நாடுகளிலும், வடந்தியாவில் நாகர்ச்சுணன் போன்ற சித்தர் களாலும் ( நாகர்சுணன் திருமூலரின் சீடர் என்று ஏற்கனவே முன் தொகுதியில் கூறியுள்ளேன் ) தமிழ் நாட்டில் சித்தர்  நூல்களிலும் மருத்துவம் இரசவாதம் என்று பயன் படுத்தி உள்ளனர். இதில் சித்தர்களால் இராசமணி என்ற உயர் பொருள் பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஒன்று புறத்தில் உள்ள பொருள்களைக் கொண்டு செய்வது மற்றொன்று நம் உடலின் உட்புறத்தில் செய்வது அல்லது நோக்குவது.
இரசமணி :-
       முன்னுரையில் கூறியபடி அகம, புறம என்று பிரித்துக் கூறுகிறேன். தற்போது புறப்பகுதியினை முதலில் பார்ப்போம். சித்தர் நூல்களில் சிலமனிகள் பற்றிக் கூறியுள்ளனர். இரசம் சித்த மற்றும் இரசவாத நூல்கள் கருத்துப்படி பிரிதிவி + அப்பு இரண்டின் கூறுபாடுகளையும் ஒன்றாக இணைந்த உலோகமாகும்.நீருக்கு உள்ள நெகிழ்வும், ஓடும தன்மையும் உடைய சிறிது கடினத்தன்மையும் கொண்டது. இந்த இரசம் சில் உலோகங்களுடன் லேசான 100’ டிகிரிக்கு உட்பட்ட உஷ்ண நிலையில் இணைந்து விடும். தங்கம் போன்ற உலோகத்தில் மிக விரைவாக கலந்து விடும் தன்மை கொண்டது. இன்றைய காலக் கட்டத்தில் இரசம் பலவிதங்களில் பயன் உடையதாகக் உள்ளது. தங்கத்தை பிற உலோகத்தின் கலப்பில் இருந்து பிரித்து சுத்தமாக்க இரசத்தை பயன்படுத்துவார்கள். மாற்றுக் குறைவான தங்கத்துடன் இரசம்+ அமிலம் கலந்து பீங்கானில் வைத்து எரிப்பார்கள். இதன் மூலம் அதில் கலந்து உள்ள ஈயம், தாம்பரம் போன்ற உலோகங்கள் பச்சை,மஞ்சள், போன்ற கலர் புகைகளாக வெளியேறும். கடைசியில் இரசமும்  புகைந்து வெளியேறி பின் சுத்த தங்கமானது கருப்பான மணல் போன்று மிஞ்சும். இதை மீண்டு குகையில் வைத்து உருக்கி எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு தங்கமாக மாற்றுவதற்கு முன் உள்ள கருப்பு மணல் போன்ற பொடியினை சில சாமியார்கள் எடுத்து வைத்துக் கொள்வார்கள். இதை தங்க குரு, முப்பு குரு என்று பெயர் சொல்லி ஏமாறு பவர்களை ஏமாற்றி தங்கம் செய்யும் முறை தனக்குத் தெரியும் என்றும் பலவித சித்தர் பாடல்களைக் கூறி  மயக்கி தன்வசப்படுத்திக் கொள்வார்கள். உண்மையில் இந்த பொடி சுத்தமான தங்க மாகும். இதனை மேற்கண்ட சாமியார்கள் குப்பிகளில் வைத்துக் கொண்டு சிலும்பியில் சல்லிக் காசுவும் இப்பொடியும் வைத்து குடிப்பார்கள் அப்போது சிலும்பியில் ஏற்படும் உயர் வெப்ப நிலையில் தங்கமும், தாம்பிர சல்லியும் உருகி இணைந்து மாற்று குறைவான தங்கமாகும். இதை இந்த சாமியார்கள் நம்மிடம் கொடுத்து கடையில் விற்கச் சொல்வார்கள். நாம் நகைக் கடையில் கொடுத்து பணம் கேட்க்கும் போது அது அதில் சேர்ந்துள்ள தங்கத்திற்கு தகுந்த மாற்றுக் குறைவான தங்கமாக இருக்கும். எனவே கடைக்காரன் அதற்குத் தகுந்த பணம் கொடுக்கும் போது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும் ஒரு சல்லிக்காசு (பைசா) நூறு, இருநூறு என்று விலை போகும் போது இதை நம்பி அந்த சாமியாரை வீட்டில் தங்க வைத்து மேற்க்கண்ட குருமருந்து செய்ய வேண்டும் என்று பணத்தை கொடுத்து ஏமாறுவதும் ஒருநாள் சாமியார் சொல்லாமல் ஓடிவிடுவதும் காணலாம். இந்த இராசத்தைக் கொண்டு லிங்கம், பூரம், வீரம், இரசசெந்துரம் என்ற பாடனங்கள் வைக்கப்படுவது உண்டு இந்த நான்குடன் இரசத்தையும் சேர்த்து பஞ்ச இரசம் அல்லது பஞ்ச சூதம் என்று குறிக்கப்படும்.
        இரசமனிக்கு தனி இரசத்தைச் சுத்தப்படுத்தியும் மேற்கண்ட இரசக்கலப்புள்ள வீரம், லிங்கம் போன்றவற்றில் இருந்து இரசத்தை பிரித்துக் கொண்டு செய்வதும் உண்டு. பொதுவாக இராசத்துடன் தாம்பரம்,வெள்ளி, காரீயம், வெள்ளீயம்போன்ற உலோகங்கள் அல்லது அது சார்ந்துள்ள உப்புக்கள், தாளகம் போன்ற ஈயக்கலப்புள்ள பாடனங்கள், மற்றும் சில உலோகச் சத்த்துள்ள முலிகை சார் கொண்டு அரைத்தும் அல்லது சுருக்கு கொடுத்தும் இரசமணி செய்வதுண்டு. இனி இரசமணி பற்றி சித்தர் நூல்களில் கூறியுள்ளதை பார்ப்போம்.









சித்தர் நூல்களில் இரசமணி :-
ஆடுகின்ற மனியதனைச் சாரனையிற்தீர்ந்தால்
அன்றன்டம் சுத்திவரும் கெவுனமாகும்
கூடுகின்ற பெண்களோடே வாயிளிட்டால்
குடிகெடுக்கும் விந்து கட்டிப்போகும்
தேடுகின்ற தேட்டெல்லாம் ராசமணி தானப்பா
தேடவென்றால் காந்தத்தின் கிண்ணம்
ஓடுகின்ற வோட்டெல்லாம் காந்தத்தாலே
உத்தமனே கற்பத்துக்கு உறுதியாகும்.
                                :-  அகத்தியர் பூரண சூத்திரம்- 216









போட்டிடவே மனிவேகம் என்சொல்வேன்
புகழான மண்டலமே மணிக்கும் பூசை
ஊட்டிடவே அன்டடான்டம் தாண்டி யோடும்
ஒடுமுன்னே சரக்கெல்லாம் கட்டிப்போகும்
நீட்டிடவே நவலோகம் தங்கமாகும்
நேராக நவலோகம் உருகும்போது
காட்டிடவே பரிட்சைபார் பத்துமாத்து
காணுமடா கணபதிக்குப் பூசை செய்யே
செய்து கொண்டு ஒரு மணியை நமசிவாயம்
செப்பியே லட்சமுரு ஆனபின்பு
வைத்து கொண்டு கருவிட்டுக் கட்டிப்பாரு
மசியுமோ கருவிடத் தீயானாலும்
வைத்து கொண்டு ஒருமணியை சிவாயநம வென்று
பகர்ந்திட்டா லெட்சம் உருபண்ணி ஏற்றி
எய்து கொண்டு பேய்பூதம் அனைத்தும் பாரு
ஏவல் செய்தே உன்னிடத்தில் இருக்கும்கொத்தே
                           :- மச்சமுனி பெருநூல்-800  
இம்மணிக்குஒரு மண்டலம் பூசை செய்தால் அண்டங்கள் அனைத்தும் செல்லக் கூடிய வேகத்தை பெரும் அறுபத்து நான்கு பாடனங்களையும் கட்டக் கூடிய தன்மையும் பெரும் மேலும் நவலோகங்களில் உருக்கி இம்மணியைக் கொடுக்க  தங்கமாகும். கணபதிக்கு நமசிவாய என்று லட்சம் உரு ஏற்றி வைத்துக் கொண்டாள் பேய், பூதம் அனைத்தும் அடங்கி நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மதயானை வீரன் குளிகை :-
உண்டான இக்குளிகை என்னசொல்வேன்
உத்தமனே வனாந்திரங்கள் செல்லும் போது
தண்டகாரண்யம் அதில் ஏகும் காலம்
தற்பரனே குளிகையது தன்னையப்பா
கொண்டதொரு குளிகைதனை கயிறு மாட்டி
கொற்றவனே இடுப்பதனில் அங்கி மாட்டி
மீண்டுடனே காட்டகத்தே செல்லும் போது
மிக்கான தனிவழியும் காணார் பார்
தனியான பாதைவழி நடக்கும் போது
தன்மையுள்ள கானகமும் கண்ணில் தோன்றா
முனியான ராட்சதரும் தம்மைத் தீண்டார்
உத்தமனே பேய்பில்லி சூனயந்தான்
கணியான சித்தர் முனிநாதர் தாமும்
கண்டாலும் உமதிடத்தில் ஒன்றும் பேசார்
பணியான வணந்தரங்கள் செல்லும் காலம்
பாலகனே மிருகங்கள் கிட்டா தன்றே
முதலான குளிகை இது என்ன சொல்வேன்
முதுலகில் யாருந்தான் காணா வீரம்
மதயானை வீரன் என்ற குளிகையாலே
மகத்தான வேதை முகம் கோடியுண்டாம்
சதகண்ட ராவணனும் இக் குளிகை கொண்டான்
                                    :- அகத்தியர் 12000 ( தொகுப்பு )
இவ்வாறு இந்த இராசமனியை அணிந்து கொண்டு காட்டில் செல்லும் போது நமக்கு மிருகங்களினால் ஆபத்துக்கள் தோன்றாது என்றும் பேய் பில்லி, சூன்யம், ராட்சதர் போன்ற தொல்லைகள் வரத்து என்றும் இது கொண்டு பல வித்தைகள் செய்யலாம் என்றும் இதன் பெயர் மதயானை வீரன் குளிகை என்றும் இக் குளிகை இராவணனும் அணிந்து  இருந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.
      பொதுவாக நடை முறையில் இராசமானது திரவநிலையில் உள்ள உலோகமாகும் இத்துடன் சிறிது நான் முன்பு கூறியது போல் வேறு உலோகங்கள் கலந்தால் தான் இரசம் இறுகிக் கெட்டியாகும். அளவுக்கு அதிகமாகவும் சேர்த்தல் கூடாது. சாறுகள் கொண்டு அரைக்கும் போது அல்லது சுருக்கு தாக்குதல் அல்லது நெருப்பில் எரித்தல் போன்ற முறைகளில் கூறப்பட்ட கால அளவு கடை பிடித்து சப்பாத்தி மாவு பிசைந்து உருட்டும் பதத்தில் செய்து கொள்வது போல் இராச வென்னையை எடுத்து கொள்ள வேண்டும். அதிகமான உப்பு பாடனங்கள் போன்றவைகள் சேர்ந்தால் வெட்டையாகி உதிரும் பதத்திற்கு வந்துவிடும். ஆகவே உருட்டும் நிலையில் உருட்டிக்கொண்டு கருஊமத்தை காய் எடுத்து இரண்டாக பிளந்து அல்லது அந்த குளிகை உள்ளே வைக்கும் படியான அளவு குடைந்து உள்ளே மணியை வைத்து மேலும் ஊமத்தன்சக்கையை கொண்டு மூடி மணல் மறைவு புடம் அல்லது எரிப்பு நூலில் கூறிய படி செய்யவேண்டும் கெட்டியான மாட்டு சானியை எடுத்து பெரும் தேங்காய் பருமன் எடுத்து  மேற்க்கண்ட மனியை வைத்துள்ள ஊமத்தங்காயினுக்கு கவசம் செய்து உடனடியாக இரண்டு மூன்று எருவடிக்கி லேசான புடம் வைக்கலாம் சாணி முக்கால் பாகம் எரிந்தால் போதுமானது ஊமத்தங்காய் எரிந்து விடக் கூடாது. கவனமாக செய்யவேண்டும். இது போல் 7,11, 21, 108, என்று புடமிட மணி இறுகி கெட்டிப் படும். பின் இவற்றை எடுத்துக் கொண்டு பூஜைகள் செய்து உபயோகிக்கலாம். இவ்விதம் மணிகள் செய்து விற்பனை செய்கின்றனர். இந்த மணியை சிலவித மூலிகைகளைக் கொண்டு கவசம் செய்து புடமி செந்தூரமாகும். அதனைபல நோய்களில் உபயோகிக்கலாம். இந்த விபரங்களை மருந்துகள் செய்விபரங்கள் எழுதும் போது தெரிவிக்கிறேன். மற்றும் மணி செய்யும் போது தேவையான இரச வெண்ணையை எடுத்து உருட்டி அந்த பதத்திலேயே சிறு தென்னமாறு குச்சியை கொண்டு மணியில் ஓட்டை செய்து அதனுள் அக்குச்சி இருக்கும் படி வைத்து ஊமத்தன்காய் அல்லது எலுமிச்சை பழத்துக்குள் வைத்து புடமிட வேண்டும். இனி கொங்கணர் கூறிய அட்டமா சித்தி மணிகளை பார்ப்போம். 
அஷ்டமா சித்திக் குளிகை :-
கேளு நீ அணிமாவொடு
கெடிஎயட்டுச் சித்தியாட
ஆளு நீ அஷ்டமாதி
யாம் அந்தக்குளிகை பாரு
வேளு நீ சுருபமான
விளக்கிய மணியின் விந்தை
நாளுநீ வாயில் போடத்
தனிச்சூடன் தீபம் ஆகும்              ---- 397
தீபம் போல் நிற்கும் தேகம்
சிதையாமல் தத்தியோடும்
கோபம பொம முளையும் போகும்
கொடிய வாசனையும் போகும்
தாபம்போம் மயக்கம் போகும்
தன்னையும் எடுக்கும் போதம்
றுபம் போம் சாயைபோகும்
நொடிகுள்ளே சித்திபாரே               ---- 398
சித்தியாம் ஞான சித்தி
சிறந்துவா இத்தன் முன்னே
இத்தியாம் அறியாமகில்
எளிதிலே ஞானம் வாரா
எத்தியாய் நோக்க நோக்க
ஒழுக்க வாசனையால் கெட்டு
பத்திய மனமும் விட்டுப்
பட்டம் போல் ஆடும்கானே             ---- 399
காணிந்த குளிகை போட்டால்
கையிலே சிக்கும் போதம்
பூனிந்த மூலனார்க்குப்
பொருந்திய நந்தி சொன்னார்
வாழ் நந்தி எனக்குச் சொல்ல
வளமாகப் பார்த்துக் கொண்டேன்
தானிந்தப் போகமூர்த்தி
தன்பதம் அறிந்திலேனே         ---400                                                                                                                                                                   
காமதேனு குளிகை :--
அறிந்திலேன் காமதேனு
மாத்திரை மார்க்கம் கேளு
நிறைந்துள்ள நினைத்த தெல்லாம்
நீட்டியே முன்னேவைக்கும்
குறைன்தொன்றும் போகாதப்பா
குளிகையை வாயில் வைத்தால்
அறைந்திந்த நூலில் சொன்னேன்
அப்பனே கண்ட பின்பே          ------ 401
போகி குளிகை :-
கண்டபின் போகினியாம்
கடுமணி குளிகை குணம் கேளு
தாண்டிய புஷ்பமாம்பை
தனித்திடு வாசம் எல்லாம்
ஒண்டிய கட்டில் மெத்தை
உறவாகும் பெண்கள் சூழ
கொண்டிடும் போகம் பண்ண
கொடுத்திடும் பாருபாரே          ----- 402
சந்தானக் குளிகை ;-
பாரு நீ சந்தானத்தின்
பருமணி மார்க்கம் கேளு
வாறு நீ துண்டு துண்டாய்
மனிதரை வெட்டிப் போட்டுச்
சேறு நீ குளிகை காட்டு
செனத்திலே பொருந்திப் போம்
காரு நீ குளிகையாலே
கடும்  யோக சித்தியாமே      ------ 403

அட்சய மணி :-
ஆமினி அட்சயத்தின்
அம்மணி விபரம் கேளு
தாமனி தனங்கள் கூச்சு
தனித்த தானியங்கள் கூச்சு
செமினி அன்னம் கூச்சு
சிறந்திடும் பொருள்கள் கூச்சு
ஏமினி குளிகை வைத்தால்
எடுக்கவும் தொலையாதாமே     ---- 404
கெவுன மணி :-
தொலையாத கெவனம் ஓடும
சூழ் மணிக்குனத்தைக் கேளு
அலையாத மனதுதானும்
அகண்டத்தை அடுக்கக் காட்டும்
நிலையாத சமாதி எல்லாம்
நிலைக்கவும் நேர்மை காட்டும்
கலையாத உமிழ் நீர் வாங்கில்
காயமும் சித்தியமே         ---- 405    
பரசிவ மணி :-
ஆமினி பரசிவத்தின்
அறிவெல்லாம் தீபம் போலாம்
தாமினி வெளியாய்க் காட்டும்
தனிமணி சித்தி கேளு
வாமினி செனங்கள் செத்து
மறுசென்மம் எடுத்த  தெல்லாம்
ஒமினி உள்ளே ஆறி
உண்மையாக் காட்டும் காணே      ---- 406
நாத வேதைக் குளிகை :-
காணு நீ நாத வேதை
கட்டுகிற முறைமை கேளு
பூனு நீ சூதம் கட்டிப்
புகட்டிச் சாரனைகள் செய்து
தோணு நீ வில்லை போல
சுகப்பட வார்த்துத்தட்ட
வாமினிச் சத்தம் கேட்கில்
அம்மட்டும் வேதையாமே   ----- 407
பரிசமணி :-
வேதையாம் பரிசந்தன்னில்
விளங்கிய மணியைக் கேளு
ஆதையாம் லோகம் செங்கல்
அடைவுடன் சுக்கான் மண்ணும்
பாதையாய்க் காட்டு முன்னே
பளிச்சென்று தங்கமாகும்
கொதையாய்ப் பனிரென்டான
குணங்களும் கூறினேனே   ----- 408
                            --------: கொண்ங்கனர் வாதகாவியம் 2000
     இவ்வாறு பல பாடல்கள் சித்தர் நூல்களில் காணக் கிடைக்கின்றன இவற்றின் விபரங்களை நூல் முழுமையும் படித்து என்ன நோக்கில் கூறியுள்ளார்கள் என்று கவனித்தும் அறிந்தவர்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக தொட்டுக் காட்ட வித்தை சுட்டுப் போட்டாலும் வாரா, என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள் நாம் எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு பயிற்சி அவசியம். இனி என்னக்கு தெரிந்ததும் எங்கள் தகப்பனார் செய்ததும் சில மகான்கள்  செய்ததுமான சில இரசமனிகள் செய் முறைகள் கூறுகிறேன்.
இரசமணி செய் முறைகள் :-













ஸ்தம்பன மணி :-
கருங்கோழி சேவலும், பெட்டையும் வளர்த்து அது முதலில் இடும் முட்டையை எடுத்து, அதில் துவாரம் செய்து மூன்று வராகன் எடை சுத்திசெய்த ரசம் விட்டு மேலு வேறு ஒரு முட்டையின் ஓட்டை துவாரத்திற்கு தகுந்தாற்போல் வைத்து மூடி லேசாக உளுந்து மாவு பூசிவிடவும். பின்பு இதனை அந்த கோழிகள் இட்ட வேறு முட்டைகளின் நடுவே வைத்து குஞ்சு பொரிக்கவைத்து விடவும். குஞ்சுகள் பொரிந்தபின் நாம் நடுவே வைத்த முட்டையை எடுத்து உள்ளே இருக்கும் ரசம் உறைந்து வெண்ணை போல் இருப்பதை எடுத்து கழுவிப்போட்டு, பின் அதை ஒரு கின்னியில்  நீர் விட்டு அதில் ஒரு நாள் பொழுது போட்டு வைத்து இருந்து எடுத்துக் கொள்ளவும். இந்தமணிக்கு இரத்தம் கொடுத்தால் குடிக்கும் என்று உள்ளது. மற்றும் இந்தமணியை வாயில் அடக்கி பெண்களை புணர்ந்தால் விந்து ஸ்த்ம்பனமாகும். வாயில் இருந்து எடுத்தால் விந்து வெளிப்படும்.
இராசமணி வேறு ;-
ஒரு மண்சட்டியில் ஒரிலை தாமரையை அரைத்து உள்ளே அடிப்பகுதியில் நன்றாக பூசி உலரவிடவும். நன்றாக காய்ந்த பின் மீண்டும் அதே ஓரிலை தாமரை இலையை பூசி உலரவிடவும் இது போல் எட்டு தடவை செய்யவும் பின்பு அந்த சட்டியில் ரசம் விட்டு கரி நெருப்பில் வைத்து ஊதி எடுத்துக் கொண்டு ஒரு துணியி வைத்து பிழியவும் துணியில் தங்கு கசடுபோன்ற போன்ற பொருளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் மீண்டும் பிழிந்த மீதமுள்ள ரசத்தை மேற்க்கண்ட சட்டியில் விட்டு கரி நெருப்பில் வைத்து ஊதி எடுத்து பிழிந்து கசடை எடுத்து முன் வைத்துள்ளதுடன் சேர்த்துக் கொள்ளவும் இதுபோல் ஐந்து முறை செய்து எடுத்து கிடைக்கும் வெண்ணையை முன் போல் ஊமத்தங்காயுக்குள் வைத்து கோழி புடம் முன் பகுதியில் சொல்லியது போல் புடமிடவும். பின்பு எடுத்து இதுபோல் சாரனைகள் செய்து கொண்டு இளம் சூடான பாலில போட்டு வைத்து  பாலைக் குடித்து வரலாம். இதனால் பல நோயிகள் போகும். மற்றும் இதனை அஷ்டகர்ம பூசைகள் செய்தும் பயன் படுத்தலாம். இதை குகையில் வைத்து ஊதி எடுக்க வெள்ளியாகும்.
மால்தேவி மணி :-
மால்தேவி ( அரிதாரம் ) = பலம்-- 2
ரசம் சுத்தி செய்தது     = பலம்—4
எடுத்துக் கொண்டு ஒரு கலையச் சட்டியில் அரிதாரத்தை நுணுக்கி பொடித்து அதனை இரண்டு பாக்க மாக பிரித்து ஒரு பாகத்தை சட்டியில் போட்டு  அதன் நடுவே குழி செய்து அதில் ரசத்தை விட்டு மேலும் பொடியை போட்டு கஞ்சா இலைச் சார் விட்டு கலையத்தில் பின் அந்த கலயத்திற்கு தகுந்த ஓடு மூடி சீலை செய்து கோழி புடமிடவும்  பின்பு இந்த ரச வெண்ணையை எடுத்து கழுவி அதை எடுத்து உருட்டிக் கொண்டு மூன்று நாள் எலுமிச்சம் பழச்சாறில் ஊற வைத்து அல்லது தண்ணீரில் மூன்று நாள் வைத்து எடுக்க கெட்டிப் படும். இதனை ஊமத்தங்காய்க்குள் வைத்து சாரனைகள் செய்து எடுத்துக் கொள்ளவும். வெள்ளி ஈயத்தை உருக்கி உருக்கு முகத்தில் கொடுத்தால் நீர் வாங்கி வெள்ளியாகும் என்று உள்ளது மற்றும் இதை முள் எலியின் வாயில் ஒருபங்கு பொடி போட்டு அதன் மேல் ரசம் விட்டு அதன் மேல் பொடி போட்டு  கஞ்சா இலைச்சார் விட்டு வாயைதைத்து புடமிடவும் என்று ஒருநூலில கூறுகிறது.
மயில் துத்தமணி :-
ஒரு இரும்பு சட்டியை நன்றாக பளபளப்பாக துரு இல்லாமல் கழுவி எடுத்துக் கொள்ளவும். அதில் கரியுப்பு, மயில்துத்தம், ரசம் சமஅளவு நிறுத்து எடுத்து முதலில் கரி உப்பை பொடித்து இரும்பு சட்டியின் நடுவில் பரப்பி கோட்டை கட்டவும் அந்த குழிக்குள் மேற்கண்ட ரசத்தை விட்டு பின் மயில் துத்தத்தை பொடித்து அந்த உப்பின் மேல் சுற்றி போடவும். பின்பு அந்த உப்புக்கள் கலங்கி விடாமல் இரண்டு படி தண்ணீரை மிக மெதுவாக விடவும். பின் ஆட்டாமல் சட்டியை அடுப்பில் வைத்து நீர் வற்றும் மட்டும் எரிக்கவும் நீர் வற்றிய உடனே ஈரப்பசை இருக்கும் நிலையில் எடுத்து ஒரு குழிக்கல்வத்தில் அந்த இரும்பு சட்டியில் இருக்கும் அனைத்து பொருள் களையும் வழித்து போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும் மெதுவாக இதனால் அந்த வெண்ணையில் உள்ள களிம்புகள் நீரில் கரைந்துவிடும் அதனை நீக்கி விட்டு மீண்டு தண்ணீர் ஊற்றி கழுவவும். இவ்விதம் நன்றாக கழுவி பின் அந்த வெண்னையை எடுத்து தேவையான அளவுக்கு உருட்டிக் கொள்ளவும் ஒரு மணி மூன்று விராகன் எடை இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். பின அதை ஒரு பீங்கான் கிண்ணியில் வைத்து நீர் அல்லது பசும்பால் மணி நன்றாக முழ்கி அதன்மேல் ஒரு விரற்கடை இருக்கும் படி விட்டு ஒருநாள் வீட்டு வைக்கவும். இவ்விதம் நீரில் வைத்து இருக்கும் போது சிறிது இறுகிய நிலையில் இருக்கும் போதே ஒரு தென்னமாறு குச்சியை எடுத்து அதில் ஓட்டை போட்டு சொருகி வைத்து அதனுடனேயே வைத்து நீரில் இருக்கட்டும். இல்லை எனில் பின்  ஓட்டை போடுவது. சிரமமாக இருக்கும். இந்தமணியை ஒரு பருமானான ஊமத்தங்க்காயை குடைந்து அல்லது மேல் வில்லையாக அறுத்து எடுத்து அதனுள் குடைந்து இந்த மணியை வைத்து உள்ளிருந்து எடுத்த ஊமத்தன் தூள்களைவைத்து பின் அறுத்து எடுத்த மேல் வில்லையைக் வைத்து ஒரு நூலால் கட்டி முன் முறையில் கூறியது போல் சாணியில் வைத்து புடம் இரண்டு மூன்று எருவில் போடவும். சாணம்  முக்கால் பாகம் வெந்தால் போதுமானது. ஆறியபின் பிரித்து மணியை எடுத்து எலுமிச்சம் சாறில் ஊரவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். இது போல் 5,6 புடம் போட்டு எடுத்துக் கொண்டு உபயோகிக்கவும்.
கெளரி மணி :-
கெளரி, கந்தகம் இரசம் இவை மூன்றும் வகைக்கு அரை விராகன் எடை எடுத்துக் கொண்டு குழிக்கல்வத்தில் போட்டு பொடித்து கட்டுக் கொடிச் மூலிகைச் சார் விட்டு அரைக்கவும் ரசம் மடிந்து கலந்து (3 மணிநேரம்) உருட்டும் பதத்தில் எடுத்துக் கொண்டு உருட்டி பின் அதே கட்டுக் கொடியை தனியாக் அரைத்து ஒரு தேங்காய் பிரமாணம் கவசித்துக் கொள்ளவும். பின்பு தரையில் எட்டு விரற்கடை குழி தோண்டி நான்கு விரற்கடை உமி போட்டு அதில் ராசமணி கவசத்தை வைத்து மேலும் நான்கு விரர்கடை உமி போட்டு மேலே ஒரு எருவை ஒன்றிரண்டாக பொடித்து போட்டு நெருப்பிடவும் பின் எரிந்து ஆறியபின் எடுத்து மீண்டு இதே கட்டுக் கொடி இலைச் சார் விட்டு அரைத்து முன் போல் புடம் இடவும். இவ்வித மூன்று புடம் இட நன்றாக கட்டும் நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும் இதை வாயிலிட்டு உறவு கொள்ள தம்பனமாகும்.
வேறு முறை :-
வட்டதுத்தி இலையும் ஈரவெங்காயமும் கூட்டி அரைத்து துணியில் வைத்து சாறு பிழிந்து குழி அம்மியில் ரசம்விட்டு மேற்க்கண்ட சார் விட்டு நன்றாக மெழுகு பதமாக அரைத்து எடுத்து உருட்டிக் கொண்டு பீங்கானில் வைத்து சூரிய ஒளியில மூன்று நாள் வைத்து பின் எலுமிச்சம் பழத்தில் உள்ளே வைத்து சாணியில் பொதிந்து இலகு புடமிடவும் மணியாகும்.
வேறு முறை ;-
ரசத்தை கல்வத்தில் விட்டு கறிமஞ்சள் போட்டு மூன்று சாமம் அரைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும் இது ஒருவித ரச சுத்தியாகும். ஒரு இரும்புச் சட்டியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அதில் மேற்கண்ட ரசத்தை விட்டு பிரண்டைச் சார் எட்டு சாமம் சுருக்கு கொடுக்கவும்( சுருக்கு என்பது ரசத்தின் மீது அல்லது எந்த மருந்துக்கு சுருக்கு கொடுக்க வேண்டுமோ அந்த சரக்கை சட்டியில், பீங்கானில், அப்றேக்தகட்டில் வைத்து அடுப்பில் வைத்து மிதமான நெருப்பில் அந்த பொருளின் மீது சொட்டிவர வேண்டும்.) அது வெண்ணை போன்ற உருட்டும் பதத்தில் எடுத்து தென்ன மாரில் ஓட்டை போட்டு குச்சியுடன் ஊமத்தன் காயுக்குள் வைத்து கட்டி சாணியில் பொதிந்து முன் போல் புடமிடவும் பின் கழுவி எடுத்து முன் போல் பத்து புடமிடவும். அதன் பின் எலுமிச்சம் பழத்தில் பத்து புடம் போடவும். பின் மாமர வேர்ப்பட்டையில் பத்து புடமிடவும் இது போல் வாழைக் அடிக் கிழங்கில் குழி செய்து வைத்து புடமிடவும். ஒவ்வொரு புடத்திற்கும் ஒரு வராட்டியாக அதிகப் படுத்த வேண்டும். இந்த மணியை வெள்ளிஈயத்தில் உருக்கு முகத்தில் குடுக்க நீர்வாங்கும்.
வேறு முறை ;-
இரசத்தை கரு ஊமத்தை சார் விட்டு அரைத்து ஊமத்தங்காய்க்குள் வைத்து சீலைமன் செய்து புடமிடக் கட்டும் இரண்டு விராட்டியில் புடமிடவேண்டும் நன்றாக வென்னையாகும் பதம் வரை அறைக்கவேண்டும்.
வேறு முறை :-
கரு ஊமத்தைச் சார் வீட்டு நன்றாக வெண்ணை போல் ஆகும் வரை அரைத்து உருட்டிக் கொண்டு இதை ஒரு பீன்ங்கானில் வைத்து நாட்டுச் சாராயம் மணிக்கு மேல் ஒரு விரற்கடை முழ்கிக் கிடக்கும் படி ஊற்றி முன்றரை சாமம் சென்றபின் எடுத்து கல்வத்தில் போட்டு கருப்பு குண்டு மணிச் இலைச் சார் விட்டு அரைத்து முன்றுசாமம் பின் உருட்டி அதை கரு ஊமத்தன் காயுக்குள் வைத்து நூலால் கட்டி ஒரு தேங்காய் அளவு சானத்தில் வைத்து பிறகு ஒரு பெரிய சட்டியில் மணல் கொட்டி இந்த சான உருண்டை முககால் பாகம் மணலில் புதைந்து இருக்கும் படி செய்தும் கால்  பாகம் மேலே வெளியில் தெரியும் படி வைத்து எரிக்கவேண்டும் சாணம் முககால் பாகம் வெந்த பின் எரிப்பை நிறுத்தி ஆறியபின் எடுத்துக் கழுவி மீண்டும் இது போல் பதினொறு புடமிட்டுக் கொள்ள நல்ல கட்டாக இருக்கும். புடம் இட்டு எடுத்த ஒவ்வொரு முறையும் பசும பாலில் ஆறு சாமம் ஊறவைக்கவும்.
ராசமணி வேறு முறை :-
ஒரு இங்கிலிசு வெள்ளைக் கல்வத்தில் தேவைப் படும் அளவு சில்வர் நைட்டிரேட் எடுத்து போட்டு அதில் கொஞ்சமாக இராசவிட்டு நமது உமிழ் நீர் விட்டு அரைக்கவும் பின் மிண்டும் இரசம் போதவில்லையானால் சிறிது விட்டு அரைக்கவும் சிறிது சிறிதாக விட்டு அரக்கவேண்டும் மெழுகு பதமாக உருட்டும் பதமாக இருக்கும் பதம் வரை விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அப்படி இரசம் அதிகப் பட்டுவிட்டால் உதிரும். அவ்வாறு இருக்குமாயின் அந்த ரசக்கலவையை சேர்த்து ஒரு பக்கமாக கல்வத்தின் பகுதியில் வைத்து ஒரு தகட்டில் அழுத்த அதிகப்படியான இரசம் வெளிப்படும். பிறகு மணிகளாக செய்து பின் முறையில் கூரிய படி ஊமத்தங்காயில் வைத்து புடமிடவும். 2,3- புடம் வரை ஒரு ஜான் அகலமுள்ள வரட்டி இரண்டரை பிட்டுவைத்து புடமிடவும். 3,4- வது புடங்களுக்கு மூன்று வரட்டிகளாக வைத்து புடமிடவும். 5,6 – வது புடங்களுக்கு முன்றரை வரட்டி வைத்து புடமிடவும். இவ்விதம் குறைந்தது ஆறு புடங்கலாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
வேறு முறை :-
ரசம் பத்து வராகன் எடை எடுத்துக்கொள்ளவும் பின் இதை ஒரு கல்வத்தில் விட்டு கம்மாறு வெற்றிலைச் சார் விட்டு ஒரு மணி நேரம் அரைத்து பின் நல்ல நீர் விட்டு கழுவிக் கொள்ளவும். இதே பிரகாரம் புளியாரைச் சார் விட்டு ஒருமணி நேரம் அரைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். அடுத்து எலுமிச்சம்பழ சார் விட்டு ஒரு மணி நேரம் அரைத்துக் கொள்ளவும். அடுத்து காட்டாமணக்கு பாலில் ஒரு மணி நேரம் அரைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பின் செங்கல் தூளில்  ஒரு மணி நேரம், மஞ்சள் தூளில் ஒரு மணி நேரம் அரைத்து கழுவி எடுத்துக் கொண்டு இரட்டை மடிப்பு துணியில் வைத்து ஒரு பீங்கானில் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இது ஒரு நல்ல சுத்தி முறையாகும் இதை மருத்துவத்திற்கும் பயன் படுத்திக் கொள்ளாலாம்.
    பின் இரண்டரை படி நீர் பிடிக்கும் படியான இரும்புச் சட்டியை நன்றாக வெள்ளிச் சட்டியை போல் விளக்கி எடுத்துக் கொண்டு அதில் கோவை இலைச் சார் அரைப்படி விட்டு அதில் சுத்தி செய்த ரசத்தை விட்டு வேப்பமர விரகினால் அடுப்பில் வைத்து கமலாக்கிநியாக எரிக்கவேண்டும். சார் சுண்டி சிறிது ஈரப்பதம் இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.இது வெண்ணை போல் இருக்கும் இந்த இராசா வெண்ணையில் வெள்ளி அரப்பொடி சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து உருட்டும் பதத்தில் எடுத்து மொத்தமாக உருட்டி அதன் பிறகு அதில் சேர்த்த வெள்ளி பொடியின் எடையளவு கந்தகம் கருப்பு வெற்றிலைச் சார் விட்டு அரைத்ததை அந்த ரச வெள்ளி உருண்டைக்கு கவசம் போல் தடவி ஒருநாள் முழுவது வெய்யிலில்  நன்றாக காய வைக்கவும். மறுநாள் அந்த கவசத்தை எடுத்து பிரித்து உள்ளிருக்கும் ரசவென்னையில் மூன்று விராகனுக்கு குறையாத மணிகளாக உருட்டி எடுத்துக் கொண்டு ஊமத்தங்காய்கள் கொண்டு வந்து அதன் காம்பு களை நீக்கி விட்டு மணியை உள்ளே வைக்கும் படியாக வில்லையாக அறுத்து எடுத்து உள்ளே உள்ள விதை சதை களை மணி கொள்ளும் அளவு எடுத்து பின் இடம் இருந்தால் எடுத்த சதை விதை தேவையான அளவு வைத்து அறுத்த மேல்தட்டைவைத்து மூடி நூலால் கட்டி வைத்துக் கொள்ளவும் இது போல் மணி களை காய் களுக்குள் வைத்து தயார் செய்து கொண்டு ஒவ்வொரு காயையும் சீலை மண் ( சீலை மண் என்பது நல்ல களிப்பான களிமண் எடுத்து நீர் வீடு பிசைந்து எடுத்து காய் வைத்து சுற்றி மூடும் அளவு துணி கிழித்து அதற்க்கு மேற்கண்ட களிமண் குழம்பை பூசி அந்த துணியை காய்கள்  வெளியில் தெரியாத வாறு சுற்றி களிமண் தடவிக் கொள்ள வேண்டும்) செய்து எடுத்துக் கொண்டு வெய்யிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இவ்விதம் செய்து வைத்து இருக்கும் காய்கள் எத்தனையோ அத்தனைக்கும் மண் தரையில் சிறு சிறு குழிகள் தோண்டி கவசக் காய்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குழிக்குள்ளும் வைக்கவும் கவசம் வைத்தபின் கவசத்திற்கு மேல்ஒரு அங்குலம் இடம் இருக்குமாறு குழி இருக்கவேண்டும் பின் அதற்குள் உமி ஒருகை போட்டு அதன் மேல் கவசத்தை வைத்து அதன் மேல் உமிஒருகை போட்டு மூடவும்.இந்த வித மாக உமி மேலும் கீலும் இருகும்படியாகவும் பூமி மட்டத்திற்கு இருக்கும்படியாக குழி இருக்கும் படி செய்து அதில் ஒரு எருவை நெருப்பிட்டு அந்த உமி மிது வைத்து விடவும் இந்ததீயானது ஊமத்தங்காய் அவிபுடம் போல் இலம்பதமாய் வெந்து போகும் அளவு இருந்தால் போதுமானது. ஆறியபிறகு எடுத்து மணியை கழுவி பின் மீண்டும் ஊமத்தங்காய்க்குள் வைத்து சீலைமான் செய்து இப்போது குழியை சிறிது பெரிது படுத்தி குழிக்குள் இரண்டு கை உமி மேலும் கீழும் போடும் படியாக செய்து அதன்மீது ஒரு வரட்டியைக் நெருப்பிட்டு முன்போல் செய்து கொள்ளவும். இவ்விதம் ஒரு புடத்திற்கு ஒருகை உமி மேலும், கீழும் போடும் படியாக குளியமைத்துக் கொண்டு புடம் 12- போடவும். பின் நன்றாய் புளிப்பேரிய தயிர் அரைப்படி கொண்டு வந்து மெல்லிய துணியில் முட்டை கட்டி தொங்கவிட்டு தண்ணீர் எல்லாம் வடிந்தபின் அந்த மெத்தையில் தேவைப் படும் அளவு எடுத்து  ரசமனியை அதற்குள் வைத்து மூடி உருட்டிக் கொள்ளவும். வாய் அகன்றதும்மான குண்டாச்சட்டி எடுத்துக் கொண்டு அதன் உள்ளே சட்டியின் பாதி அளவுக்கு தண்ணீர் ஊற்றி வாய் புறத்திற்கு துணியால் வேடுகட்டிக் கொண்டு அதில் ரசமனிகளை வரிசையாக வைக்கவும். பின் அடுப்பில் வைத்து ஒன்றை மணி நேரம் பலபல வென எரித்து எடுத்து பார்க்க மணிகள் நல்ல கெட்டியாக இருக்கும் அந்த மணிகளை ஒரு சட்டியில் வைத்து ஐம்பது மில்லி சாராயம் விட்டு தீவைக்கவும் எறிந்ததும் எடுத்துக் கொண்டு பசும பாலில் ஒரு மணி நேரம் ஊரவைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
முடிவுரை :- இதுவரை இரச மணி பற்றி சித்தர் நூல்களில் புறக் கண்ணோட்டத்துடன் கூறியவைகளையும் தந்துள்ளேன் மற்றும் விபரம் அதிகமாக விரும்புவோர் சித்தர் நூல்கள் மற்றும் இது அறிந்த பெரியோரிடம் அடுத்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் இதில் தெரிவித்துள்ள மணிகள் எங்கள் குடும்பத்திலும் சில மாகான்களின்செய்து பார்த்தமுறைகளில் சிலவற்றை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இம் மணிகளை வைத்து வசியம், தம்பனம், மோகனம். வித்வேசனம், போன்ற அஷ்டகர்ம மந்திரங்களை பூசையில் வைத்து உருவேற்றி  பலன்களும் பெறலாம் என்பது மகான்களின் கருத்தாகும். இனி சித்தர்களின் நூல்களில் அகமுறையில் ரசமணி பற்றிப் அடுத்த பிரிவில் பார்ப்போம்.                                   




No comments: